24 65fe41ca980ee
இலங்கைசெய்திகள்

உயிரிழந்தவரின் சடலத்தினால் ஏற்பட்ட குழப்பம்

Share

உயிரிழந்தவரின் சடலத்தினால் ஏற்பட்ட குழப்பம்

பாணந்துறை பகுதியில் உயிரிழந்த தொழிலதிபர் ஒருவரின் சடலத்தினை அவரது இரண்டு மனைவிகளும் உரிமைக்கோரியதனால் மலர்சாலையில் வைத்து அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை வலான பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் மாரடைப்பு காரணமாக பாணந்துறை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வர்த்தகருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும், அவர் இறக்கும் போது இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபரின் முதல் மனைவி சட்டத்தரணி என்றும், இரண்டாவது மனைவி பிரதேச செயலக உத்தியோகத்தர் எனவும், இருவருக்கும் பிள்ளைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதற்கமைய, பாணந்துறை மரண விசாரணை அதிகாரி துமிந்த அதிகாரம் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்போது சட்டத்தரணி மனைவி இறந்த கணவரின் உடலை தனது வீட்டில் வைத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும்,இறுதி அஞ்சலியை தடையின்றி நடத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்கு இரண்டாவது மனைவி,உறவினர்கள்,நண்பர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமான நிலைக்கு வராமையினால், பொலிஸாரின் தலையீட்டில் மலர்சாலையில் சடலம் வைக்கப்பட்டு பின்னர் புதைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இறந்தவரின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் மேற்கொள்ளப்படும் வரை எவ்வித மோதலுமின்றி இரு தரப்பும் செயற்பட இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...