tamilnaadih 9 scaled
இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்த ஜனாதிபதி

Share

தமிழ் மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகம் செய்த ஜனாதிபதி

தமிழ் மக்களின் பிரச்சினைகளை அறிவிக்க அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இலக்கத்தின் மூலமாக வடக்கு கிழக்கு மக்கள் தமிழ் மொழியில் பொலிஸ் உதவிகளைப் பெற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இலங்கை

முன்னாள் அமைச்சரால் ராஜபக்ச குடும்பத்திற்கு ஏற்பட்ட பரிதாப நிலை .

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகள் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், அவற்றை மீண்டும் விசாரிக்குமாறு...

Featuredgughik
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர் முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய பாதாள உலகக் குற்றவாளியான தனுஷ்க கௌசல்ய என்ற “ரத்மலானே சைமா”...

இஷாரா செவ்வந்தி
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் இஷாரா செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்ருந்த சந்தேக நபரான இஷாரா...