2 1 scaled
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியே ஜனாதிபதியை தீர்மானிக்கும்

Share

மொட்டு கட்சியே ஜனாதிபதியை தீர்மானிக்கும்

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.

அமெரிக்காவில் சில காலம் தங்கியிருந்த பெசில் இன்றைய தினம் (5.3.2024) நாடு திரும்பியுள்ளார்.

நாடு திரும்பிய அவர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி வலுவான நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுடன் சில மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்ததாகவும், புதிய உத்வேகத்துடன் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மொட்டுக் கட்சியின் ஆதரவுடனான வேட்பாளரே வெற்றியீட்டுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டு கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் வழமையானவை எனவும் அரசியல் இது சகஜமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்த போது நாட்டை விட்டு செல்வதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பெசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் கட்சியின் ஒழுங்கமைப்பு பணிணகளை தாம் மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...