tamilni 530 scaled
இலங்கைசெய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பெப்ரவரி மாதத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த வருடத்தில் 05 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு குறிப்பிடுகின்றது.

இதேவேளை, ஜனவரி மாதம் வரை 60க்கும் மேற்பட்ட டெங்கு அபாய வலயங்கள் காணப்பட்ட நிலையில், 24 ஆக குறைந்துள்ளது.

இதற்கமைய, பெப்ரவரி மாதத்தில் 5,181 டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி மாதத்தில் இலங்கையில் 10,417 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையாகும். அதன்படி, இந்த வருடத்தில் நாட்டில் 15,598 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி மாதத்தில், கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அந்த எண்ணிக்கை 3,359 ஆகும்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,245 டெங்கு நோயாளர்களும், கம்பஹா மாவட்டத்தில் 1,324 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் 1,052 நோயாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...