tamilnaadid scaled
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது

Share

வவுனியாவில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது

வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (16.02.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வவுனியா, வாரிக்குட்டியூர் மற்றும் சமயபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் என பல பொருட்கள் மீட்கப்பட்டதுடன் 30 இற்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களுடன் அவர்கள் இருவரும் தொடர்புடையவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
1624450407 online edu 02
அரசியல்இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கற்றல் மேம்பாடு: சீருடை கட்டாயம் இல்லை என கல்வி அமைச்சு அறிவிப்பு!

‘தித்வா’ சூறாவளியின் பாதிப்புக்குள்ளான மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கப்படவுள்ளதாகக்...

check pope expresses closeness with disaster affected asian nations 69369cbe1d564 600
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவு: போப் ஆண்டவர் லியோ உறுதி!

‘தித்வா’ சூறாவளியால் (Ditwa Cyclone) பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவளிக்குமென, பாப்பரசர் பதினான்காம் லியோ (Pope...

cockroach caye
இலங்கைசெய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: கரையோர மற்றும் சமுத்திரச் சூழலில் இயற்கை மூலதனப் பெறுமதி திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடல் தொகுதிகளில் இயற்கை மூலதனப் பெறுமதி (Natural Capital Valuation)...

articles2FHunX6FjizMUdoWOOrG0X
அரசியல்இலங்கைசெய்திகள்

மன்னார் முள்ளிக்குளத்தில் 100 மெகாவாட் காற்றாலை பூங்கா: 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்க அமைச்சரவை அனுமதி!

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு...