1 6 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

மொட்டுக்கட்சிக்குள் கடும் மோதல்: நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க திட்டம்

Share

மொட்டுக்கட்சிக்குள் கடும் மோதல்: நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க திட்டம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்துமாறு பொதுஜன பெரமுனவின் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று செயற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாமல் ராஜபக்சவின் விருப்பத்தின் பேரில் இந்த கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேரா முன்னிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையினால் கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான பின்னணியில்  தம்மிக்க பெரேரா தேர்தலில் போட்டியிட முன்வந்தால் எதிர்க்கட்சிகள் வலுவடையும் என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை முன்னிறுத்துவதற்கு கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் மேற்கண்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...