tamilni 244 scaled
இலங்கைசெய்திகள்

பொதுஜன பெரமுனவில் களமிறங்கும் வேட்பாளர் : மகிந்த அறிவிப்பு

Share

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நிலையான இலக்கை அடைய முடியாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் ஒரு வேட்பாளர் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாமல் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாமல் இருக்கலாம்.

அரசியல் ரீதியில் நாங்கள் குறிப்பிடும் கருத்துக்கள் திரிபுப்படுத்தப்படுகின்றன.எமது அரசாங்கம் வரி குறைத்ததால் நெருக்கடிகள் தோற்றம் பெற்றது என குறிப்பிடப்படுகிறது. தற்போது வரி அதிகரிப்பினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நிலையான இலக்கை அடைய முடியாது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம்.

கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். பிரிந்து சென்றவர்கள் எம்முடன் தாராளமாக ஒன்றிணையலாம். அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...