நாட்டில் உள்ள இரு பிரதான அரச வங்கிகள் விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த இரண்டு அரச வங்கிகளும் இலாபம் ஈட்டும் வங்கிகள் எனவும் அவ்வாறான வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு கணக்குகளை பராமரிக்கும் இவ்விரு வங்கிகளின் நிலுவைத் தொகை அதிகமாக உள்ளதாகவும் அதில் பாதியை வசூலித்தால் இந்த இரண்டு வங்கிகளையும் பலப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.