இலங்கை – கஸகஸ்தானுக்கு நேரடி விமான சேவை
கஸகஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமானச் சேவைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானச் சேவையை (06.12.2023) ஏர் அஸ்தானா விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இதன்படி 165 சர்வதேச சுற்றுலா பயணிகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் முதல் விமானம் தரையிறங்கியுள்ளது.
விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் என்பன இந்த முதல் விமானத்தை வரவேற்றதோடு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விமான குழுவினரையும் பயணிகளையும் வரவேற்க பாரம்பரிய நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த விமானச் சேவைகள் ஏப்ரல் 2024 வரை செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.