இலங்கை
ஏழு நாட்டவர்களுக்கு இலவச விசா: சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு
ஏழு நாட்டவர்களுக்கு இலவச விசா: சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு
விசா இல்லாமல் இலங்கைக்கு வர ஏழு நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும் நடைமுறை, நவம்பர் 07 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தில் திருத்தங்களுடன் நவம்பர் 06 இல், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இந்த நடைமுறைக்கு அங்கீகாரம் பெறப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஏழு நாடுகளின் பிரஜைகளுக்கு விசா இல்லாமல் இலங்கைக்கு பிரவேசிக்க கடந்த மாதம் 23 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
இந்த விடயத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது எக்ஸ் தள பதிவின் மூலம் உறுதி செய்ந்திருந்தார்.
இதன்படி, இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இன்றி இலங்கைக்கு பிரவேசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.