tamilni 331 scaled
இலங்கைசெய்திகள்

தாயின் கல்லறையில் உயிரை மாய்த்துக் கொள்வேன்! அழும் அம்பிட்டிய தேரர்

Share

தாயின் கல்லறையில் உயிரை மாய்த்துக் கொள்வேன்! அழும் அம்பிட்டிய தேரர்

எனது தாயின் கல்லறையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவில்லை எனில் கல்லறை அருகிலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தனது தாயின் கல்லறையை கனரக இயந்திரம்கொண்டு சேதப்படுத்தியுள்ளனர் என தெரிவித்து நேற்றையதினம்(25) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று அம்பிட்டியே சுமனரத்ன தேரர் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதிக்கு நேற்று மாலை சென்றிருந்த அம்பிட்டியே சுமனரத்ன தேரர் அங்கு கத்தி கூச்சலிட்டு குழப்பம் விளைவித்திருந்தார்.

அத்துடன், “இந்த பகுதியில் எனது தாயின் சமாதி அமைந்துள்ளது. இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுவே இனவாதம். நாம் இனவாதத்தை தூண்டும் தேரர்கள் அல்ல. நாம் இலங்கையில் உள்ள தமிழ், முஸ்லீம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் உதவி செய்துள்ளோம். நாம் யாருடைய மயானங்களையும் அழிக்கவில்லை. கனரக இயந்திரங்களால் சுத்தப்படுத்தவில்லை.

எனது தாயின் சமாதிக்கு அடுத்ததாக இந்துக்களின் மயானம் உள்ளது. அதனை தாண்டி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் மயானங்கள் உள்ளன. ஏன் அவற்றை எவரும் கனரக இயந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யவில்லை? ஏன் சிங்களவர்களின் மயானத்தை மாத்திரம் சுத்தம் செய்கிறீர்கள்?

சாணக்கியன் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென நான் ஜனாதிபதி, பொலிஸார் உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளிடம் கோருகிறேன்.

இவ்வாறாக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் கிழக்கிலுள்ள அனைத்து தமிழர்களையும் சிங்களவர்கள் வெட்டுவார்கள்” என இருதயபுரம் பகுதியில் வைத்து அம்பிட்டியே தேரர் கடும் தொனியில் எச்சரித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அம்பிட்டிய சுமனரத்ன தேரர், தமது தாயின் சமாதியை அழிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும் கண்ணீர் மல்க கோரியுள்ளார்.

“ஏன் எனது தாயின் சமாதியை அழிக்கிறீர்கள்? இந்த நடவடிக்கையை நிறுத்த நான் என்ன செய்ய வேண்டும்? முப்படையினர் கடந்த 2016 ஆம் ஆண்டு எனது தாயின் உடலை தகனம் செய்தார்கள். அந்த தாயின் சமாதியை தற்போது ஏன் கனரக இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்கிறீர்கள்?

நான் இந்த விடயம் தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாடின் தற்போதைய நிலை என்ன? இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகள் என்ன?

எனது தாயின் கல்லறை அழித்தவர்களை கைது உடன் கைது செய்யவில்லை எனில் அந்த கல்லறையிலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட மட்டக்களப்பு அரசியல்வாதிகளே இவ்வாறு செய்தனர்” எனவும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...