rtjy 272 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

கொழும்பு அரசியலில் குழப்பம்! கட்சி தாவும் 16 எம்.பிக்கள்

Share

கொழும்பு அரசியலில் குழப்பம்! கட்சி தாவும் 16 எம்.பிக்கள்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் கட்சியில் இணைவது தொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் நளின் பெர்னாண்டோ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவான 16 பேர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, ஜகத் புஸ்பகுமார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, ஆகியோரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் குறித்த 16 பேரும் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவது தொடர்பில் நீண்ட நேரம் பேசியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...