இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!

rtjy 267 scaled
Share

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல்!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மிகவும் வறண்ட காலநிலையால், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்துள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளதாவது, 2023.08.24ஆம் திகதியின் நிலவரப்படி, நீர் வழங்கல் அமைப்புகளுக்கு வழங்கக்கூடிய நீரின் அளவு குறைவடைந்ததால், 11 மாவட்டங்களில் உள்ள 43 நீர் விநியோக அமைப்புகளில் 131,132 நீர் இணைப்புகளுக்கு கொள்கலன்கள் (பவுசர்) மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகின்றது.

இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, பதுளை, களுத்துறை, நுவரெலியா, மாத்தறை, அம்பாந்தோட்டை, அம்பாறை, மொனராகலை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீர் வழங்கும் நீர் ஆதாரங்களின் நீர் கொள்ளளவு குறைந்துள்ளது.

கண்டி – ஹந்தான பிரதேசத்திற்கு நேர அட்டவணை முறையின் ஊடாக 100 வீத நீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நாட்களில் நீர் நுகர்வு படிப்படியாக அதிகரித்து வருவதால், நீர் வழங்கல் அமைப்புகளில் உள்ள பிரதான நீர் தொட்டிகளில் நீரின் அளவு விரைவாக முடிவடைகிறது.

மேலும், கடுமையான வெப்பநிலை காரணமாக, சிலர் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளிக்கிறார்கள்.

பல நீர் ஆதாரங்கள் வறண்டு கிடக்கும் இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும், வாகனங்களைக் கழுவுதல், குழாய்கள் மூலம் பூக்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுதல் போன்றவற்றைச் சுத்தம் செய்ய வேண்டாம் என்றும் பிரதி பொது முகாமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...