நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள பௌத்த மதகுருமார்!
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள பௌத்த மதகுருமார்!

Share

நீதிமன்ற உத்தரவை மீறியுள்ள பௌத்த மதகுருமார்!

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிவசேனையின் மறவன்புல சச்சிதானந்தன் உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சாடியுள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், குருந்தூர் மலையில் இடம்பெறுவது தனியான ஒரு சம்பவமில்லை மாறாக அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழர்கள் சார்ந்த பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு நீண்டகால தந்திரோபாயமே முன்னெடுக்கப்படுகின்றது.

அதாவது வடக்கு-கிழக்கின் குடிசன பரம்பலை மாற்றுவது, நாடாளுமன்றத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது உட்பட பல நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான தந்திரோபாயமே முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்காக தொல்பொருள் திணைக்களம், இராணுவம் பௌத்த மதகுருமார்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.

இந்து வலதுசாரி அமைப்பான சிவசேனையின் மறவன்புல சச்சிதானந்தன் போன்றவர்கள் அரசாங்கத்தின் இந்த மூலோபாயத்தை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் முன்னெடுக்கின்றனர்.

இந்த குழுக்களிற்கு ஆதரவளித்து கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களிற்கு எதிரான கருத்துக்களை வெளியிடும் தமிழர்கள் இதனை கருத்தில்கொள்ள வேண்டும்.

இந்த விடயம் குறித்து கரிசனையற்றவர்கள் பௌத்த மதகுருமார் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளதையும் அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

இது நீதித்துறையின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செயல்படாத நீதி அமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் ஒரு செயலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...