வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம்
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம்

Share

வாய்த்தர்க்கம் முற்றியதால் கொலையில் முடிந்த அவலம்

கொழும்பு – பாணந்துறையில் நண்பர்கள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை – வாழை சந்தைக்கு முன்பாக நேற்றையதினம்(24.07.2023) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பாணந்துறை – கெசல்வத்த கல்லுபர பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மொஹமட் ஆஷிஸ் மொஹமட் அக்ரம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மோதலில் பலத்த காயமடைந்தவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் அங்கு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர் உடல்நிலை பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது.

முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்த அனுமதி பெறுவது தொடர்பாக இருவருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையே பின்னர் மோதலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்
இலங்கை

சிறைச்சாலையிலிருந்து தப்பியோடிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள்.

  இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஏழு ஆண்டுகளில் சுமார் 1,178 கைதிகள்...

இலங்கை வியட்நாம் விமான சேவை
இலங்கை

ஆரம்பமானது இலங்கை – வியட்நாம் விமான சேவைகள்!

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான...

Veterinary Officer
இலங்கை

தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொடரும் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை!!

வனஜீவராசிகள் திணைக்கள கால்நடை வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள சட்டப்படி பணி செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, அவசர...

anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...