காங்கேசன்துறை - இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை
இலங்கைசெய்திகள்

காங்கேசன்துறை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை

Share

காங்கேசன்துறை – இந்தியா இடையே பயணிகள் கப்பல் சேவை

இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,

ஒக்டோபர் மூன்றாவது வாரத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின் நிலையைப் பொறுத்து கால அளவு மாறலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இத்திட்டத்திற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் இந்தியா சென்று இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 6823d086c8e1c
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

தமிழரசுக்கட்சியை அழித்தவரே வெளியில் இருந்து அமைச்சர்களைப் பதவி விலகக் கோருவது கேலிக்கூத்து’ – எம்.பி. இளங்குமரன் ஆவேசம்!

தமிழரசுக்கட்சியை அழிப்பதற்கு மூலகாரணமாக இருந்தவரும், நாடாளுமன்றத்திற்கு வரமுடியாது விரட்டியடிக்கப்பட்ட ஒருவரும் வெளியில் இருந்து அரசாங்க அமைச்சர்களைப்...

MediaFile 2 5
இலங்கைபிராந்தியம்

மன்னாரில் தேசிய நீர் வழங்கல் சபையின் விசேட முகாம்: பெரிய கரிசல் கிராமத்தில் ஒரே நாளில் புதிய இணைப்புச் சேவை!

மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால், மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய...

images 2 9
செய்திகள்இலங்கை

நாளை மிரிஹானை பொதுக்கூட்டத்தால் போக்குவரத்து மாற்றம்: மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தல்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் நாளை (நவம்பர் 21) நண்பகல் நடைபெறவுள்ள...

japan sri lanka flags
செய்திகள்இலங்கை

5000 ஜப்பானிய மொழிப் பயிற்சியாளர்கள்: இலங்கையில் புதிய வேலைத்திட்டங்களை உருவாக்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டம்!

2026ஆம் ஆண்டிற்குள் ஜப்பானிய மொழிப் பயிற்சியை பூர்த்தி செய்த 5000 இலங்கையர்களைக் கொண்ட ஒரு குழாத்தை...