download 8 1 12
அரசியல்இலங்கைசெய்திகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் சிறீதரன் சந்திப்பு!

Share
இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதானிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (24) நண்பகல், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்த விவரண அறிக்கை ஒன்றை கடந்த 2023.05.09 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பித்த சிறீதரன் எம்.பி, அவ் அறிக்கையின் பிரதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்,  இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தூதுவர்கள், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புகள் என்பவற்றுக்கு தனித்தனியே அனுப்பிவைத்திருந்த நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அவ் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே, ஆணைக்குழுவின் பிரதானிகளால் இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, தனியாருக்கோ, மத நிறுவனங்களுக்கோ சொந்தமான காணிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அனுமதியற்ற கட்டுமானங்கள் தொடர்பில் உரிய தரப்பினர் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கின்ற போது, பொலிஸ் முறைப்பாடு செய்தல், வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தல் உள்ளிட்ட வழிமுறைகளையும் கையாளும் பட்சத்தில், இதுவிடயமாக  தமது நிறுவனம் சார்ந்து மேல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர், நீதிபதி.ரோகினி மாரசிங்க சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
#srilankaNews

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...