கட்டையால் அடிவாங்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் !
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைக் கட்டையால் தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (20) காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் புத்தல நீர் வழங்கல் சபைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட முற்பட்டுள்ளனர்.
இதன்போதே சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியின் தலையில் தடியால் தாக்கியுள்ளார்.
அப்போது அங்கிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபரை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
#srilankaNews
Leave a comment