download 10 1 11
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யுடன் இணைந்த வெங்கட் பிரபு!

Share

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்தது. இப்படத்தை முதலில் ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தை இயக்கிய கோபிசந்த் மலினேனி இயக்குவதாகவும், பிறகு அட்லீ இயக்குகிறார் எனவும் பல தகவல் வெளியாகி வந்தது. அதன்பின்னர் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தளபதி 68வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு மோஷன் போஸ்டர் வீடியோ வெளியிட்டு அறுவித்துள்ளது. அதன்படி தளபதி 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் ஏஜிஎஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளது. இதற்குமுன்பு அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தளபதி 68 படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளதாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...