download 6 1 5
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

Share

கிளிநொச்சியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

‘வலி சுமந்த காலத்தில் உயிர்காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி‘  வரலாற்றை இளைய சமுதாயத்திற்கு கடத்தும் நோக்கில் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும்  செயற்திட்டம் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில் நேற்றையதினம்(09) காலை ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து யாழின் பல பகுதிகளிலும் பல்கலை மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கும் நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றது.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக மக்கள் பங்களிப்புடன் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் கிளிநொச்சியில் இன்று ஆரம்பமானது.

இன்று காலை 8:30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றதோடு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் பொதுமக்களின் வீடுகளிற்கு நேரடியாக சென்று ஒரு பிடி அரிசி பெற்று அதனை திரட்டி கஞ்சி காய்ச்சப்பட்டு கொண்டிருக்கின்றது.

தொடர்ச்சியாக 11 மணியளவில் முல்லை புதுக்குயிருப்பு மண்ணில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fc4bb76f874
இலங்கைசெய்திகள்

பேருவளையில் வெள்ளை வேனில் கடத்தல்: முகமூடி அணிந்த குழுவினர் கைது செய்யப்படலாம்!

பேருவளையில் (Beruwala) வெள்ளை வேனில் முகமூடி அணிந்த ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின்...

25 68fc8ee613459
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: சிறையில் அடைக்கப்பட்ட ‘மிதிகம ருவான்’ மீது பொலிசார் விசாரணை!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதேச...

25 68fc8c23901e1
செய்திகள்இலங்கை

கரூர் சோகச் சம்பவம்: உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்கிறார்!

கரூர் சம்பவம் இந்தியாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை...

Ilankumaran
செய்திகள்இலங்கை

யாழில் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தகவல் தரலாம்: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தமக்குத் தகவல்களை வழங்கலாம் எனத்...