கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து, அதன் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment