இலங்கை
ATM இயந்திரம் கோாிக்கை! கையெழுத்து சேகாிப்பு!
தோப்பூர் இலங்கை வங்கிக் கிளைக்கு ATM இயந்திரத்தை பொருத்தித்தருமாறு கோரி பொதுமக்களின் 5000 கையெழுத்துக்கள் சேகரிக்கும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (03) இடம்பெற்றது.
தோப்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மக்கள் ஆர்வத்துடன் கையெழுத்துக்களை இட்டனர்.
தோப்பூர் வர்த்தக சங்கம், பொதுமக்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
தோப்பூரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் ATM இயந்திரம் கிடையாது.
ATM இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் சுமார் 15 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மூதூர் நகருக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செல்ல வேண்டும்.
இந்நிலையில் தோப்பூரில் BOC கிளைக்கான ATM இயந்திரத்தை பொறுத்தித்தரகோரி நாளையிலிருந்து மூன்று நாட்களுக்கு பொதுமக்களின் கையெழுத்து வேட்டை இடம்பெறவுள்ளது.
இவ்வாறு பெறப்படுகின்ற கையெழுத்துக்களின் பிரதிகள் அனைத்தும் தோப்பூர் இலங்கை வங்கிக்கிளை, திருகோணமலை பிராந்திய காரியாலயம், கொழும்பு தலைமை காரியாலம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: பயணிகளின் உடைமைகளுடன் பயணிகளின் எடையையும் பரிசோதித்த விமான நிறுவனம்; ஒரு சுவாரஸ்ய செய்தி... - tamil