அரசியல்
மக்களுக்கு போதையூட்டும் செயல்களில் தமிழ் அரசியல்வாதிகள்! டக்ளஸ் தொிவிப்பு!
மக்களுக்கு போதையூட்டும் செயல்களில் தமிழ் அரசியல்வாதிகள்! டக்ளஸ் தொிவிப்பு!
சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு போதையூட்டக்கூடியவாறு செயற்படுகிறார்கள் என கடற் தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
இன்று வேலனைபிரதேச செயலகத்தில்இடம்பெற்ற பெரும் போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ராணுவத்தின் மேலதிக பங்களிப்புடன் வறிய குடும்பங்களுக்கான இலவச அரிசிப்பொதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,
வறிய மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 லட்சம் குடும்பங்களை தெரிவு செய்து ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ எடையுடைய அரிசி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரபட்சமற்ற விதத்தில் ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்துள்ளார் இந்த முடிவினை எடுத்தது கிளிநொச்சி விவசாயிகளோடு ஜனாதிபதி களத்தில் சந்தித்தபோது நெல்லுக்கான உத்தரவாத விலையினை நூறு ரூபாவாக அறிவித்து இந்த திட்டத்தையும் அவர் அதில் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் பாரபட்சமற்ற வகையில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றார் வட மாகாணத்தை பொறுத்தவரையில் இலங்கையினுடைய ஏனைய மாவட்டங்களைவிட சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த திட்டம் சிறப்பாக நடைபெறுகின்றது. அந்த வகையில் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிபர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கின்றேன்.
இந்த பிரதேச மக்கள் எதிர்கொள்கின்ற பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. அதாவது ஒரு தேவையற்ற யுத்தத்தில் விசேடமான பிரச்சனைகள் எதிர்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நாடு தழுவிய ரீதியில் பொருளாதார ரீதியான பாதிப்புகளுக்கு எங்கள் மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
அந்த வகையில் இந்த நாடு கடந்த கால தேவையற்ற அழிவு யுத்தம் காரணமாக கொரோனா தொற்று காரணமாக ஆட்சி தலைவர்களின் நிதி மற்றும் பொருளாதார முறையான முகாமைத்துவம் இல்லாத நிலை காரணமாக எங்களுடைய நாடு பொருளாதார ரீதியாக ஒரு அதாள பாதாளத்துக்கு சென்று விட்டது.
அந்த நேரத்தில் இந்த நாட்டுக்கு தலைமை தாங்கக்கூடிய பாதிப்பில் இருந்து மக்களை மீட்கக்கூடிய முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய வகையில் யாரும் இருக்கவில்லை எல்லோரும் பின்னடித்த நேரத்தில் எங்களுடைய மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன் வந்ததை மக்கள் சார்பாக இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு நான் பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
நாட்டுத் தலைவர்களுக்குள் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்தான் இந்த இக்கட்டான நிலைமையில் இருந்து எங்களை முன் கொண்டு செல்லக்கூடிய ஒரு தலைவர் இருக்கின்றபடியினால் நாங்கள் அவரோடு நம்பிக்கையோடு நாங்கள் பயணிக்கலாம் என்பதையும் நான் இந்த சந்தர்ப்பத்தில் உங்களுக்கு தெளிவுபடுத்த வலியுறுத்த விரும்புகின்றேன்.
நாடாளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டைக்காடில் இருநூறு ஏக்கர் சீனாவுக்கும் கிளிநொச்சியில் 800ஏக்கள் வெளிநாடுகளுக்கு கொடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்
அதில் எந்தவிதமான உண்மை இல்லை நமது அரசாங்கத்தில் அவ்வாறு திட்டமும் இல்லை எந்தவிதமான அடிப்படையும் இல்லாமல் அவ்வாறான பொய்யினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறினிகள் போன்ற சில தமிழ் உறுப்பினர்கள் சாணியல் போன்ற சில உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலே இப்படியான உரைகளை முன்னெடுப்பதன் ஊடாக சாணி சிறினி போன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பொய் கூறி மக்களை தவறாக வழிநடாத்துகின்றனர்
வாக்குகளை அபகரிக்க கூடிய வகையில் கருத்துக்களை வைத்து வருகின்றார்கள் ஆனபடியினால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் போதை வஸ்து பற்றி பேசுகின்றோம் இவர்களுடைய இந்த கருத்துக்களும் மக்களுக்கு ஒரு போதை ஊட்டக்கூடிய வகையில் தான் அமைந்திருக்கின்றன
ஆனபடியினால் விழிப்பாக இருக்க வேண்டும் என நான் தெரிவித்துக் கொள்கின்றேன் பொய்களை கூறி மக்களிடமிருந்து வாக்குகளை அபகரிப்பதற்காக அவர்கள் பொய்யான விடயங்களை பேசுகின்றார்கள் என்பதை மக்கள் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் – என்றார்,
#srilankaNews
You must be logged in to post a comment Login