IMG 20230420 WA0000
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கைதடி விபத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உயிாிழப்பு!

Share
யாழ்.கைதடிப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில்  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இரவு(19) 9.30 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
கொடிகாமம் பொலிஸ் நிலைய போக்குவரத்து  பிரிவு உதவிப்  பொலிஸ் அத்தியட்சகரே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன்  பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த உதவிப் பொலிஸ்  அத்தியட்சகர் மோதுண்டு வீதியில் வீழ்ந்துள்ளார்.
 இதன்போது முன்னால் வந்த லொறி அவரை மோதித்தள்ளியுள்ளது.
உயிரிழந்தவர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குருணாகலையைச் சேர்ந்த 54 வயதுடைய ஆர்.எம்.குணரத்ன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பஸ்ஸின் சாரதி மற்றும் லொறியின் சாரதி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 #srilankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...

image 1200x630 3
செய்திகள்இலங்கை

தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்துவெளியிட்ட அரசியல்வாதி

தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து...

image 1200x630 2
செய்திகள்உலகம்

ஆயுதங்களை கீழே போடுங்கள் ஹமாஸிற்கு அமெரிக்கா கண்டிப்பு

மத்திய கிழக்கில் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான மூத்த அமெரிக்க இராணுவத் தளபதி ஒருவர், “காசாவில் அப்பாவி பாலஸ்தீன...

image 1200x630 1 2
செய்திகள்இந்தியா

இலங்கை சிறைச்சாலைகளில் கடும் நெரிசல் நிலை

இலங்கையின் சிறைச்சாலைகளில் கடுமையான நெரிசல் நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டிலுள்ள 36 சிறைகளில் சுமார்...