images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

Share

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
இதன் மூலம் சிங்கப்பூரில் இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் பின் அக்பர் ஹுசைன், பெயர் வெளியிடப்படாத மற்றொரு சிங்கப்பூர் நபர், மலேசியாவைச் சேர்ந்த சாமிநாதன் செல்வராஜு ஆகிய மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். நாளை புதன்கிழமை (03) அன்று  நடைபெறும் விசாரணைக்கு முன்னதாக இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மிகவும் கடுமையான போதைப்பொருள் தடுப்புச் சட்டங்களைக் கொண்டுள்ளது. 15 கிராம் ஹெராயின் அல்லது 500 கிராம் கஞ்சா போன்ற குறிப்பிடத்தக்க அளவு போதைப்பொருட்களைக் கடத்துபவர்களுக்கு அங்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
தூக்கிலிடப்பட்ட சாமினாதன் கடந்த 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
ஆனால், அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இந்த மரண தண்டனை பெரும்பாலும் கீழ்மட்ட கடத்தல்காரர்களை மட்டுமே தண்டிப்பதாகவும், முக்கிய குற்றவாளிகளை தப்பிக்க விடுவதாகவும் சுட்டிக் காட்டுகின்றன

Share
தொடர்புடையது
25 693b75dbdb13b
இலங்கைசெய்திகள்

காதலிக்கு ஸ்மார்ட் ஃபோன், மீதிப் பணத்தைச் சூதாட்டம்: அளுத்கமையில் கொள்ளையிட்ட இளைஞன் கைது!

அளுத்கமைப் பகுதியில் பணம் மற்றும் தங்க நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய ஒருவர்...

the economic times tamil
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு: 24 கரட் பவுண் ரூ. 339,000!

நாட்டில் இன்றையதினம், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் 3,000...

images 7 4
உலகம்செய்திகள்

ChatGPT தூண்டுதலால் தாயைக் கொன்ற மகன்: Open AI மீது குடும்பத்தினர் வழக்கு!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த சோல்பெர்க் (Saulberg) என்பவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் திகதி தனது...

25 693bfb6f9f0d2
உலகம்செய்திகள்

திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரிக்கின்றன: ஐ.நா.வின் கடுமையான எச்சரிக்கை!

உலகம் முழுவதும் திடீர் காலநிலை மாற்றங்கள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) நேற்று...