வடக்கு கிழக்கில் விரைவில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு 7 தமிழ் கட்சிகளும், 22 பொது அமைப்புக்களும் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளன.
இன்று மாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா , ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா (வேந்தன்), மத குருமார்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
#SriLankaNews
Leave a comment