இலங்கை
யூரியா விலை மேலும் குறையும்
10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் யூரியா உரத்தின் விலை எதிர்வரும் சிறு போகத்தில் மேலும் குறைக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அதற்கமைய ஒரு மூடை யூரியா உரத்தின் விலை 7,500 ரூபாய் முதல் 9 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்றார்.
அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட எரிபொருளை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், ஒரு ஹெக்டேருக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் 650 கோடி ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உடனடியாக பணம் கிடைக்காத விவசாயிகளுக்கு மேலும் 150 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
விவசாயிகளின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கும் விவசாயிகளையும் நுகர்வோரையும் பாதுகாப்பதற்காகவும் இந்தச் சலுகைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login