202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்

பண மோசடி – 24 பேர் கைது!

Share

வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி, பலரிடம் பெரும் தொகையில் பண மோசடியில் ஈடுபட்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தமையும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணைப் பிரிவினால் ஜனவரி, பெப்ரவரி ஆகிய மாதங்களில்  முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்விரு மாதங்களிலும் சுமார் 173 முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், முறைப்பாட்டாளர்களிடம் இருந்து அறவிடப்பட்டிருந்த பணம் 126 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக சட்டவிரோத நிறுவனங்கள் மற்றும் முகவர்களிடம் பணம் வழங்குவதைத் தவிர்க்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான நபர்கள் தொடர்பில் 0112 864 241 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
64 magnitude earthquake strikes baculin philippines no tsunami warning issued 1767762531718
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.7 மெக்னியூட் அளவில் அதிர்வு – சுனாமி எச்சரிக்கை இல்லை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவில் இன்று (07) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

Seeman 3
செய்திகள்இந்தியா

ஜன நாயகன் படத்தைத் தடுக்கும் அளவிற்கு சர்ச்சைகள் இல்லை – சென்சார் தாமதம் குறித்து சீமான் ஆவேசம்!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) திரைப்படம்...

Screenshot 2025 12 05 173047
செய்திகள்இலங்கை

பதிவு செய்யப்படாத வர்த்தகர்களுக்கும் நிவாரணம்: அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய கடன் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களை (SME) மீண்டும் கட்டியெழுப்புவதற்கான...

9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original
செய்திகள்இலங்கை

திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர்...