யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் (09) முன்னெடுக்கப்பட்டது.
“பல்கலைக்கழக கல்வி சாரா பணியாளர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வேண்டும்”, “மின்சாரம் எரிபொருள் எரிவாயு பொருட்களின் விலைகளைக் குறை”, “நியாயமற்ற வரிக் கொள்கையை உடனடியாக திருத்து”, “சம்பள முரண்பாட்டினை தீர்க்கும் குழுவின் அறிக்கையினை உடனடியாக நடைமுறைப்படுத்து”, “அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீளவும் திறந்து கல்வி உரிமையை உறுதிப்படுத்து”, “பல்கலைக்கழக விவகாரங்களில் கல்வி அமைச்சரின் மௌனம் ஏன்?” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள் மார்ச் 15ஆம் திகதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெறும் என்றனர்.
#SriLankaNews
Leave a comment