அரசியல்
பதவி விலகுகிறார் பிரதமர்??
பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே வெளியிட்டுள்ளார்.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு தரப்பினராலும் கோரப்படவில்லை அல்லது செல்வாக்கு செலுத்தப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் சதியின் ஒரு பகுதியே இது எனவும் உரிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login