thumb large Roshan ranasinghe
இலங்கைசெய்திகள்

‘Clean and Green city SriLanka’ நாளை ஆரம்பம்

Share
பசுமையான இலங்கை (Clean and Green city Srilanka ) எனும் தொணிப்பொருளில் நகர தூய்மையாக்கல் வேலைத்திட்டம் இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் வளர்ச்சியில் இளம் சந்ததியினரின் பங்களிப்பு, தலையீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இளைஞர் விவகாரம்  மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன  இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இலங்கையின் சகல பிரதேச செயலக பிரிவுகளில் இருந்தும்  ஒவ்வொரு நகரங்களை தெரிவுசெய்து இந்தத் திட்டத்தை  செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சிரமாதான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு   இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அவர்களின் தலைமையில்  நாளை (03) காலை திகதி 9 மணிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற பிரதான காரியாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் மஹரகம நகரின் 5 இடங்களில் நகர தூய்மைப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...