இலங்கையில் தனிநபர் கடன் 11 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தொகை கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில், 793,888 ரூபாயாக இருந்தது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வாராந்த பொருளாதாரச் சுட்டெண்ணின்படி, 2022 ஆகஸ்ட் மாத இறுதியில் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 24,69 பில்லியன் ரூபாய் அல்லது 24 டிரில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தனிநபர் கடன் சுமையின் கணக்கீடு வருடாந்த மொத்தக் கடனை சராசரி வருடாந்த சனத்தொகையால் பிரிப்பதன் மூலம் கணக்கிடப்படுகின்றது. அதன்படி இந்நாட்டில் தனிநபர் கடன் சுமை 11 லட்சத்து 14 ஆயிரத்து 551 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
#SriLankaNews
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment