நாளை (09) அனைத்து அரசு மற்றும் அரசாங்க உதவி பெறும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஆலோசனையின் பின்னர் நிலவும் வானிலையின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, அரச பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment