சீனாவினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 2 பில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
மொத்தம் 24 கொள்கலன்களில் 255 மெட்ரிக் தொன் எடையுடைய மருத்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் இதுவரை இலங்கைக்கு 5 பில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகளை சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
#SriLankaNews
Leave a comment