இலங்கை
ஆடைகளுக்கு கொடுப்பனவு கோரும் ஆசிரியர்கள்!


ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டால் அதற்கென கொடுப்பனவு ஒன்று வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அச் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
வசதியான ஆடைகளை அணிந்து அலுவலகங்களுக்கு வருமாறு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை தன்னிச்சையாக மாற்ற அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக ஜோசப் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டுள்ளார்.