அரசியல்
அரசியல் ஆதாயத்துக்காக சுதந்திரக் கட்சி பயன்படுத்தப்படுகிறது!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்வதற்கு ராஜபக்ச குழாம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவித்த அவர்,
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காகவே 2019 ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர்.
அந்த குற்றச்சாட்டுகளை நான் நம்புகிறேன். எனினும், இந்த விஷயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றார்.