image d09d8c0bbd
இந்தியாஇலங்கைசெய்திகள்

மேலும் 10 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!

Share

மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று (23) காலை தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரம் பகுதியை சென்றடைந்துள்ளனர்.

வவுனியா, கணேசபுரத்தை சேர்ந்த உதயசூரியன் அவரது மனைவி பரிமளம் மற்றும் அவரது நான்கு குழந்தைகள் மற்றும் வவுனியா மாவட்டம் புவரசம் குளம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் இலங்கை மன்னாரில் இருந்து நேற்று (22) இரவு படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரம் பகுதியில் இன்று (23) காலை சென்றடைந்தனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இலங்கையில் வாழ வழி இல்லாததால் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 1
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி: முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே அதிரடி கைது – 72 மணிநேரத் தடுப்புக் காவல்!

இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான தாக்குதலான 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில், முன்னாள்...

08 1
செய்திகள்இலங்கை

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவு: பிளாஸ்டிக் துகள்களை ‘ஆபத்தானவை’ என அறிவிக்க விஞ்ஞானிகள் சர்வதேச அளவில் அழுத்தம்!

இலங்கையின் மேற்கு கடற்கரையில் எக்ஸ்-பிரஸ் பேர்ல் (X-Press Pearl) கப்பல் மூழ்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடையவுள்ள...

images 1 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

73 மில்லியன் பணமோசடி வழக்கு: டெய்சி ஃபாரெஸ்ட் விடுதலை; யோஷிதாவுக்கு எதிரான விசாரணை தொடரும்!

சுமார் 73 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களைச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்...

06 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: 4 வாகனங்கள் பறிமுதல், மொனராகலையில் சிக்கிய துப்பாக்கிதாரி – சதித்திட்டம் அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி வாகன நிறுத்துமிடத்தில் வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி சுட்டுக்...