image c8d3e91dca
இலங்கைசெய்திகள்

தானியங்கி முறையில் பஸ் டிக்கெட்!

Share

பஸ் பயணச்சீட்டுகளை (டிக்கெட்) வழங்குவதற்கு புதிய தானியங்கி முறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் தங்களது வங்கிகளின் வரவு அல்லது கடன் அட்டைகள் மூலம் பஸ் கட்டணத்தை செலுத்தும் வகையில் முறைமை அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

நடத்துநர் இல்லாமல் பஸ்கள் இயக்கப்படும் என்பதால் அவற்றின் பின்பக்க கதவு மூடப்பட்டிருக்கும் என்றும் பயணிகள் தாங்கள் உள்ளே வரும் இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் புதிய சாதனங்களில் தங்களது வங்கி அட்டைகளை செலுத்த வேண்டும் என்றார்.

பஸ்களில் ஜிபிஎஸ் அமைப்பை அணுகும் திறன் கொண்ட புதிய மின்னணு சாதனங்கள் பொருத்தப்படும் என்றும் அவற்றின் மூலம் கட்டணம் அறவிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.

வங்கி அட்டை இல்லாத பயணிகள், சாரதிக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் பஸ் கட்டணத்தை பணம் மூலம் செலுத்தமுடியும் எனவும் தெரிவித்தார்.

பஸ் உரிமையாளரின் அனுமதியுடன் சாரதி தமக்கு தேவையான உதவியாளரை வைத்திருக்க முடியும் என்றும் தெரிவித்த அவர், புதிய சாதனங்களை வழங்குவதற்கு மத்திய வங்கி ஏற்பாடு செய்யும் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pregnancy symptoms 16781131673x2 1
இலங்கைசெய்திகள்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ. 5,000 ஊட்டச்சத்துக் கொடுப்பனவு; பாதிக்கப்பட்டோரின் கடன் காலக்கெடு நீட்டிப்பு!

நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்கள்...

1737798087 new train service 2
இலங்கைசெய்திகள்

ரயில் சேவையின் அனைத்து பதவிகளுக்கும் பெண்கள் ஆட்சேர்ப்பு: அமைச்சரவை அனுமதி வழங்கியதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

இலங்கை ரயில் சேவையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது...

MediaFile 6 1
இலங்கைசெய்திகள்

ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் மீதான லஞ்ச வழக்கு: ஜனவரி 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் நிதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் (Perpetual Treasuries)...

44527896 afkanistan33
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை ஆப்கானிஸ்தான் தடுக்கத் தவறிவிட்டது: லஷ்கர் தலைவர் எச்சரிக்கை!

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளைத் தடுப்பதில் ஆப்கானிஸ்தான் தவறிவிட்டது என்று லஷ்கர் அமைப்பின் மூத்த தலைவர்...