1617610630 sathosa 2
இலங்கைசெய்திகள்

சதொசவில் மதுபான விற்பனைக்கு அனுமதி!!!

Share

நாடு முழுவதும் உள்ள 300 சதொச விற்பனை நிலையங்களுக்கு மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்க, கலால் திணைக்களம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.

இந்நிலையில் அனைத்து சதொச நிறுவனங்களுக்கும் உடனடியாக மதுபான உரிமங்களைப் பெறுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறாயினும், பொதுமக்களின் ஆட்சேபனை மற்றும் சில சதொச வர்த்தக நிறுவனங்கள் அடிப்படை நியமங்களுக்கு இணங்கவில்லை என்பதனால் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விதிகளுக்கு இணங்காத சில சதொச நிறுவனங்களுக்கு இந்த அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுக்கும் போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் தேவையான அனுமதிப்பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்டதும், சதொச கடைகளில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

கலால் திணைக்களம் இதுவரை சுமார் 6,000 மதுபான உரிமங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...