அரசியல்
சஜித்துடன் இணையவில்லை – சுதர்ஷினி மறுப்பு!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைந்தமையை மறுத்துள்ளார்.
சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட எம்.பிக்கள் குழு, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் இணைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் இன்று (14) முற்பகல் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள சுதர்ஷினி எம்.பி, பாராளுமன்றத்தில் கூட்டு எதிர்க்கட்சியாக செயல்படுவது மட்டுமே ஒப்பந்தம் என்றும் ஐ.ம.ச கூட்டணியில் தான் இணையவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.