closed
இலங்கைசெய்திகள்

உணவகங்கள் முற்றாக மூடப்படும் அபாயம்!!

Share

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் முட்டை பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின், புதன்கிழமைக்குள் (16) நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முற்றாக மூடப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் எச்சரித்தார்.

முட்டை தட்டுப்பாடு காரணமாக அப்பம், பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி, முட்டை ரோல்ஸ், கேக், புடிங், வட்டிலப்பம் போன்ற உணவுப் பொருட்களின் உற்பத்தி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக அமைச்சு உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பரிவுகளும் உடனடியாக தலையிட்டு முட்டை சங்கங்களுடன் கலந்துரையாடி இப்பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த அவர், இல்லையெனின் பிரச்சினை தீவிரமடையும் என்றார்.

விலையை குறைக்க வேண்டுமானால் குறையுக்குமாறும் அதிகரிக்க வேண்டுமானால் அதிகரிக்குமாறும் தெரிவித்த அவர், ஏதாவது செய்து தமக்கு முட்டை வழங்குமாறும், இல்லையெனில் ஹோட்டல் தொழில் தொடர முடியாது என்றும் குறிப்பிட்டார்.

முட்டை தட்டுப்பாட்டினால் கேக் உற்பத்தி போன்ற வீட்டு கைத் தொழில்களும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...