இலங்கை
பகலுணவு திட்டத்துக்கு நிதியம்!


11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போது மாணவர்களுக்கு பகலுணவு வழங்குவதற்காக நிதியம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், நிதியத்தின் ஊடாக உணவு வழங்கும் நடவடிக்கையை இரு மடங்காக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.