அரசியல்
அரசுடன் இணைகிறது இ.தொ.கா!


அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) விருப்பம் தெரிவித்துள்ளது.
இ.தொ.கா.வின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இணைவது என்பது இ.தொ.காவுக்கு வழங்கப்படும் அமைச்சினை பொறுத்தது என்று அவர் கூறியுள்ளார்.
மலையகத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் உதவ முடியும் என தமது கட்சி கருதுவதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான அரசாங்கத்தில் இ.தொ.கா, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுமா என வினவியதற்கு, அவ்வாறான சாத்தியக்கூறுகள் சாத்தியமில்லை என ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ மீது தனக்கு மரியாதை இருக்கும் அதே வேளையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இடையேயான அரசியல் தொடர்பு தற்போது முடிந்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.