இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணத்துக்கு வரி கிடையாது!

Share

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது..

உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் மாதாந்த வருமான வரி தொடர்பான சமீபத்திய நிலவரத்தை விளக்கிய அமைச்சர், உத்தியோகபூர்வ வங்கி முறைக்கு வெளியில் சட்டவிரோதமாக நாட்டுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு இந்த வரிச்சலுகைக்கு உரிமையில்லை என்று கூறினார்.

“நீங்கள் சம்பாதித்தவுடன் பணம் செலுத்தும் வரி முறை இந்த நாட்டில் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளி நாட்டின் வரிக் கொள்கைகளுக்கு உட்பட்டவர். எனவே, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தில் அந்த நாடு தொடர்பான வரித் தொகை செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, அவர்கள் இந்த நாட்டுக்கு அனுப்பும் வெளிநாட்டுப் பணத்துக்கு இனி ஒருபோதும் வரி விதிக்க மாட்டோம். அவ்வாறு செய்வது நெறிமுறை அல்ல. ஆனால், அந்நாட்டின் அதிகாரப்பூர்வ வங்கி முறை மூலம் வெளிநாட்டு நாணயங்களில் பணம் அனுப்பப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வரிச் சலுகை கிடைக்கும்.

மற்றபடி சட்ட விரோதமான வேறு வழிகளுக்கு இந்த நாட்டுக்கு பணம் அனுப்பி வரிச்சலுகையை எதிர்பார்க்காதீர்கள். அவர்கள் கண்டிப்பாக புதிய வருமான வரி விதிப்புக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்”. என்றார்

மேலும் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பணம் அனுப்பும் நபர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் இலங்கை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...