அரசியல்
நாளை கூடுகிறது தேசிய சபை


நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பேரவை நாளை மறுதினம் (29) வியாழக்கிழமை முதல் தடவையாக கூடவுள்ளது.
சபாநாயகர மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் தலைமையிலான தேசிய பேரவைக்கு இதுவரை 32 உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் டலஸ் அழகப்பெரும அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.