வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் போது சுங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் பொருட்களை அனுப்புமாறு இலங்கை சுங்க திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் பொருட்கள் இழப்பு மற்றும் சேதம் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில், சுங்கச்சாவடியில் பதிவு செய்யப்படாத முகவர் நிலையங்கள் ஊடாக பொருட்களை அனுப்பும் போது இந்த சம்பவங்கள் பெரும்பாலும் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.
#SriLankaNews
Leave a comment