அரசியல்இலங்கைசெய்திகள்

கோணேஸ்வர விவகாரம்! – பேசித் தீர்ப்பேன் என்கிறார் விதுர

Vithura wikkiramanayakka
Share

திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பான பிரச்சினைகளை நேரில் ஆராய அங்கு விரைவில் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடவுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சிவஞானம் சிறிதரனால் முன்வைக்கப்பட்ட திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

“வரலாறுகள் தொடர்பில் நான் பேச விரும்பவில்லை. அகழ்வாராய்ச்சிகளில் பௌத்த, இந்து புராதன அடையாளங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை, வரலாற்றை நீங்கள் திரிபுபடுத்தக்கூடாது. தொல்லியல் சட்டங்கள் மாற்றப்படும் வரை அதனைக் கடைப்பிடிப்பதே எமக்குள்ள தெரிவு.

இதேவேளை, நான் திருக்கோணேஸ்வரம் ஆலயம் தொடர்பான பிரச்சினைகளை நேரில் ஆராய அங்கு விரைவில் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடவுள்ளேன்” – என்றார்.

இதன்போது குறுக்கிட்ட சிறிதரன் எம்.பி., “நீங்கள் அங்கு வரும்போது ஆலய தரப்பினருடன் நாமும் பங்கேற்க முடியுமா?” – என்று கேட்டார்.

எனினும், இதற்குக் கடும் எதிர்ப்பு வெளியிட்ட சரத் வீரசேகர எம்.பி., திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினரின் விருப்பத்தின்படியே அங்குள்ள கடைகள் சிங்களவர்களுக்கு வழங்கப்படுகின்றன என்று கிழக்கு மாகாண ஆளுநர் உறுதியாகத் தெரிவித்துள்ளார். ஆலய நிர்வாகமே அதனை விரும்பியுள்ள நிலையில் அந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அனுமதிக்கக் கூடாது. இவர்கள் குழப்பங்களை ஏற்படுத்தவே செய்வார்கள்” – என்றார்.

தனது உரையைத் தொடர்ந்த அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, “இந்தப் பிரச்சினை சிக்கலானது. எனவே, நான் இதனைப் பேசித் தீர்ப்பேன்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....