இலங்கை
நாடு திரும்பினார் ஜனாதிபதி!


இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று (செப்.21) காலை நாடு திரும்பினர்.
டுபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ஈ.கே. 650 விமானம் மூலம் 8.23 மணிக்கு அவர்கள் நாட்டை வந்தடைந்தனர்.
பிரித்தானியா சென்ற ஜனாதிபதி மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வ சந்திப்பை மேற்கொண்டதுடன், பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களையும் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.