அரசியல்
தேர்தல் பற்றிய ஆர்வம் மக்களுக்கு இல்லை!


” நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையானது, எந்தவொரு தேர்தலையும் நடத்துவதற்கு பொருத்தமான சூழ்நிலை அல்ல” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
உள்ளாட்சிசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. என்பன வலியுறுத்தியுள்ள நிலையிலேயே விமல் வீரவன்ச, இவ்வாறு கூறினார்.
” பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தற்போது தேர்தல் பற்றிய ஆர்வம் மக்களுக்கு இல்லை. எனவே, தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணம் இதுவல்ல.” – எனவும் விமல் குறிப்பிட்டார்.