ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முடிவுக்கு கட்டுப்படாமல் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட , இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த தகவலை பதுளை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, தமது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சகிதம் பதுளையில் வர்த்தக நிலையமொன்றுக்கு நேற்று சென்று பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.
இதன்போது அங்கு வந்த இருவர், இராஜாங்க அமைச்சரை திட்டி, அவருக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், ஹெல்மட் ஒன்றினால் இராஜாங்க அமைச்சர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, உடனடியாக செயல்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பதுளை பொலிஸாருக்கு அறிவித்து தாக்குதல் முயற்சியை மேற்கொண்ட இருவரைக் கைது செய்தனர்.
அவ்வேளையில் அவர்களில் ஒருவர் கீழே விழுந்ததினால், பலத்த காயங்களுடன் பதுளை அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இராஜாங்க அமைச்சருக்கு எதுவித பாதிப்புகளும் ஏற்படாததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல், தமது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் சகிதம் வீடு திரும்பினார்.
#SriLankaNews
Leave a comment